மக்களே கவனம்..எவ்வளவு பசி இருந்தாலும் தப்பி தவறிகூட இந்த உணவுகளை மதியம் சாப்பிடாதீங்க!
எந்த உணவுகளை மதியம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
மதிய உணவு
நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் உண்ணும் உணவு மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் நமது உடல் மோசமான பாதிக்கப்படும்.
எனவே காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் பெரும்பாலும் தீங்கு விளைவிக்காத உணவுகளை மட்டுமே நாம் சாப்பிட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மதிய உணவில் கவனம் செலுத்தாமல் கிடக்கிறதை சாப்பிடுவதால் மெல்ல உடலை உள்ளே இருந்து சேதப்படுத்த தொடங்குகிறது.
வறுத்த உணவுகள்
பெரும்பாலும் வேலைக்கு லஞ்ச் பாக்ஸில், வெளியில் வருத்த உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், அது செரிமான ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
எனவே, வறுத்த உணவே சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் சாமத்தை சமைத்த உணவை சாப்பிடுங்கள்.
இரவு மிஞ்சியது
மதிய உணவில் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட முயற்சியுங்கள். இரவில் எஞ்சிய உணவை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
மீறினால், வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் வயிறு உபாதைகள் ஏற்படுத்தக்கூடும்.
சூப் அல்லது சாலட்
ஒரு சிலர் மதிய உணவுக்கு சூப் அல்லது சாலட் மட்டுமே சாப்பிடுவார்கள். ஒரு விதத்தில் இது ஆரோக்கிய உணவு என்றாலும் மதிய உணவில் எப்போதும் சரிவிகித உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
சூப் அல்லது சாலட் சாப்பிட்டால், மாலையில் சில ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
பழங்கள்
தினமும் மதிய வேளையில் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் பழங்களை சாப்பிடலாம்.
ஆனால், பழங்களை மதிய உணவாக சாப்பிட்டால், அது உங்கள் செரிமான அமைப்பை கெடுத்துவிடும்.
சாண்ட்விச் அல்லது பேக்
செய்த உணவுகள் மதிய உணவாக ஒருபோதும் சாண்ட்விச் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது. இவை ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும்.
வெண்ணை, சர்க்கரை, என்ன எல்லாவற்றையும் அதிகமாக சேர்ப்பதால் அதனை நேரடியாக மதியான உணவாக உட்கொள்வது பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
பீட்சா அல்லது பாஸ்தா
மதிய உணவாக பீட்சா அல்லது பாஸ்தா சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
செரிமானத்தை அமைதியாக்கிவிடுவதால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்க தொடங்குகிறது.