HMPV வைரஸ் பாதிக்காமல் தப்பிக்கணுமா? அப்போ இதை மட்டும் சாப்பிடுங்கள்!
HMPV வைரஸில் இருந்து விடுபட, உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.
HMPV வைரஸ்
HMPV வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முக்கியமாக குழந்தைகளையும் வயதானவர்களையும் அதிகம் பாதிக்கிறது.
காய்ச்சல், சோர்வு, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துவது இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. தற்போது சீனாவில் அதன் தாக்கமும் தீவிரமும் அதிகரித்துள்ளது. இந்த வைரஸில் இருந்து விடுபட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
அதற்கு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்து பார்க்கலாம். வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, கிவி, பெர்ரி, பெல் பெப்பர்ஸ் மற்றும் தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். கிரீன் டீ குடிக்கலாம். இது சுவாச பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் தொற்றுகளை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற பல வகையான மீன்களிலும், சியா விதைகள், அக்ரூட் பருப்புகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளிலும் ஒமேகா -3 அதிகமாக நிறைந்துள்ளது.
எனவே, அதனை சாப்பிடுவதன் மூலம் நுரையீரலில் வீக்கங்களை தடுக்கலாம். பூண்டு, இஞ்சி, மஞ்சள், கீரைகளில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.