KFC நிறுவனம்; உயிருக்கு ஆபத்தான ரசாயனம் கலப்படம் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

Tamil nadu Thoothukudi
By Swetha Jul 05, 2024 05:26 AM GMT
Report

கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

KFC நிறுவனம்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பானிபூரிகளில் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக பல புகார்கள் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

KFC நிறுவனம்; உயிருக்கு ஆபத்தான ரசாயனம் கலப்படம் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி! | Food Safety Raid At Thoothukudi Kfc Panipuri Stall

அந்த வகையில், தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பானி பூரி கடைகளில் சோதனைக்காக பானிபூரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான பொருட்களை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான கேஎஃப்சி சிக்கன் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

'பல்லி மெதுவடை' கொடுத்த டீக்கடை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை!

'பல்லி மெதுவடை' கொடுத்த டீக்கடை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை!

ரசாயனம் கலப்படம்

அதுமட்டுமின்றி, பழைய எண்ணையை சுத்திகரிக்க மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற ரசாயனத்தை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அங்கிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது.

KFC நிறுவனம்; உயிருக்கு ஆபத்தான ரசாயனம் கலப்படம் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி! | Food Safety Raid At Thoothukudi Kfc Panipuri Stall

மேலும், உணவு சமைக்க முடியாத கெட்டுப்போன 45 லிட்டர் பழைய எண்ணை, 12 மணி நேரத்துக்கு மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக உணவகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர். மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.