2 நாள் சிக்கன் கிரேவி, பொங்கல், முட்டை - சிறை கைதிகளின் மெனு மாற்றம்!

Tamil nadu
By Sumathi Jun 06, 2023 03:55 AM GMT
Report

சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறை வாசிகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைவாசிகளின் உணவுமுறை மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்திருந்தார்.

2 நாள் சிக்கன் கிரேவி, பொங்கல், முட்டை - சிறை கைதிகளின் மெனு மாற்றம்! | Food Provided To Prison Inmates In Tamil Nadu

அதன்படி, புதிய உணவு திட்டத்தை புழல் மத்திய சிறையில் துவக்கி வைத்தார். அதில், ஞாயிற்றுக்கிழமை காலை உணவாக இனி கோதுமை உப்புமா, திங்கள்கிழமை காலை உணவாக பொங்கல், சாம்பர், செவ்வாய்கிழமை ராகி உப்புமா, உருளைக்கிழங்கு மசாலா,

மெனு மாற்றம்

புதன்கிழமை தக்காளி சாதம் முட்டையும் வியாழன் எலுமிச்சை சாதமும் வெள்ளிக்கிழமையில் இட்லி சாம்பாரும் சனிக்கிழமைக்களில் புதினா சாதம் வழங்கப்படும். மேலும், வாரத்தின் 2 நாட்களுக்கு வழக்கம்போல் அசைவ உணவுகள் வழங்கப்படும் என புதிய உணவு முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 நாள் சிக்கன் கிரேவி, பொங்கல், முட்டை - சிறை கைதிகளின் மெனு மாற்றம்! | Food Provided To Prison Inmates In Tamil Nadu

இதனால் பி கிளஸ் சிறைவாசிகளுக்கு நாள் ஒன்றுக்கு 96 ரூபாயில் இருந்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ கிளஸ் சிறைவாசிகளுக்கு நாள் ஒன்றுக்கு 146 ரூபாயில் இருந்து 207ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமானவரி செலுத்தும் குற்றவாளிகள் ஏ கிளாஸ் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.