உயிருக்கே ஆபத்து..சிக்கனில் இந்த பாகத்தை மட்டும் சாப்பிடவே கூடாது - ஏன் தெரியுமா?
சிக்கனில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிக்கன்
அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் , மீன், இறால் ,சிக்கன் ஃப்ரை, சிக்கன் கறி, சிக்கன் கபாப், சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, சிக்கன் லாலிபாப் போன்றவற்றைத் தினமும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
இந்த இறைச்சி உடலுக்கு வலுவூட்டுவது மட்டுமின்றி புரதம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சத்தான உணவு ஆகும்.
ஆபத்து
ஆனால் சிக்கனில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும் அது எந்த பகுதி தெரியுமா..?அந்த பகுதி சிக்கனின் தோல் பகுதிதான். ஏனெனில் சிக்கன் தோலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் டன் கணக்கில் உள்ளது .
இதில் ஊட்டச்சத்து இல்லை. மேலும் கோழியின் தோலை உண்பதால் உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்வதோடு, அதிக எடையும் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.