பந்தியில் லேட்டா வந்த ரொட்டி.. கடுப்பான மாப்பிள்ளை மணமகளுக்கு தந்த மறக்க முடியாத பரிசு!
சாப்பாடு பரிமாற தாமதம் ஆனதால் மாப்பிள்ளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பந்தியில்..
உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் ஹமித்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மெஹ்தாப் என்ற இளைஞருடன் அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த வாரம் தொடங்கிய திருமணவிழா மணமகள், மணமகனின் உறவினர்கள் சூழ உற்சாகமாக நடந்தது.
அப்போது மணப்பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளை குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர், பிறகு அவர்களுகு உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகனின் உறவினர் ஒருவருக்கு ரொட்டி(உணவு) தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தனக்கு உணவு தாமதமாக கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த மணமகனின் உறவினர் திருமண விழாவில் கூச்சலிட்டார். இதனால் திருமண வீடு களேபரமாக மாறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தினர், மணமகன் தரப்பைச் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
பரிசு
ஆனால் அதை சற்றும் கண்டுகாத மணமகன் குடும்பம் பாதியிலேயே வெளியேறினார்கள். இதனிடையே விடிந்தால் திருமணம் என்ற நிலையில், மணமகன் காணாமல் போனார். சிறிது நேரம் கழித்து மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளை உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதை கேட்டு மணமகள் உள்பட அவரது குடும்பத்தினர் ஆடிப்போனார்கள். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில். மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக தரப்பப்பட்ட ரூ.1.5 லட்சம் உட்பட ரூ.7 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும்,
அதனை பெற்றுத்தர வேண்டும் என்றும் என்றும் திருமணம் செய்வதாக ஏமாற்றியது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் மணமகன் உள்பட 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மணமகள் குறிப்பிட்டுள்ளார்.