Monday, Jul 14, 2025

ரசகுல்லா இன்னும் வரல.. கலவரமான கல்யாண வீடு - நேர்ந்த சோகம்!

Uttar Pradesh Marriage Crime
By Sumathi 3 years ago
Report

திருமண விருந்தில் ரசகுல்லா தராததால், வாக்குவாதாமாகி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருமணம்

உத்தரப் பிரதேசம், ஆக்ராவை அடுத்த எட்மத்பூரைச் சேர்ந்தவர் இஸ்மான் அகமது. இவரது இரண்டு மகள்களுக்கும், வகார் அஹமது என்பவரின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது விருந்தில் சிலருக்கு ரசகுல்லா பரமாறப்படவில்லை என கூறப்படுகிறது.

ரசகுல்லா இன்னும் வரல.. கலவரமான கல்யாண வீடு - நேர்ந்த சோகம்! | Fight Over Rasgulla During Wedding Function Agra

இதுகுறித்து தெரிவித்த நிலையில், இருவீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, நாற்காலிகளை கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கியுள்ளனர். இந்தக் கைகலப்பு முற்றவே சிலர் கரண்டி, கத்தி என எடுத்து தாக்க தொடங்கியுள்ளனர்.

முற்றிய மோதல் 

இந்த மோதலில் சன்னி(22) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல் அதிகாரி ரவிக்குமார் தெரிவிக்கையில்,

பந்தியில் ரசகுல்லா பரிமாறப்படவில்லை என்ற காரணத்திற்காக சின்னஞ்சிறு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது பெரும் மோதலாக மாறியுள்ளது. விருந்தினர்கள் மீது ஒருநபர் கத்தியை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சன்னி என்ற நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.