மத்திய அரசு; கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற உணவு தானியங்கள் எவ்வளவு? வெளியான தகவல்..

Government Of India India
By Swetha Oct 14, 2024 03:39 AM GMT
Report

கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற உணவு தானியங்கள் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டது.

 உணவு தானியங்கள்

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு, 'பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' என்ற உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மத்திய அரசு; கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற உணவு தானியங்கள் எவ்வளவு? வெளியான தகவல்.. | Food Grains That Tn Got Last Yr Central Govt Info

இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்பட உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2023-24ம் ஆண்டு இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள்,

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது - மத்திய அரசு நிறுத்தம்!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது - மத்திய அரசு நிறுத்தம்!

வெளியான தகவல்

யூனியன் பிரதேசங்களுக்கு 4 கோடியே 95 லட்சத்து 45 ஆயிரத்து 597 மில்லியன் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு; கடந்த ஆண்டு தமிழகம் பெற்ற உணவு தானியங்கள் எவ்வளவு? வெளியான தகவல்.. | Food Grains That Tn Got Last Yr Central Govt Info

உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில்

இந்த காலக்கட்டத்தில் 23 லட்சத்து 36 ஆயிரத்து 649 மில்லியன் டன் உணவு தானியம் பெற்றுள்ளது. இந்த முழு விவரத்தையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.