சாப்பாடு கூட மன அழுத்தத்தை போக்கும் தெரியுமா? லிஸ்ட் இதோ - ட்ரை பண்ணுங்க!

Depression
By Sumathi Jul 25, 2023 11:30 AM GMT
Report

மன அழுத்தத்தில் இருந்து மீள உதவும் சில உணவுகள் பற்றி அறிந்துக்கொள்வோம்...

மன அழுத்தம்

மூளையின் ஆரோக்கியத்திற்கும், உயிரணு சரியாக இயங்கவும் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இறைச்சி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்ட விலங்கு பொருட்கள் நினைவாற்றல் இழப்பு மற்றும் சோர்வை எதிர்த்துப் போராட உதவும்.

சாப்பாடு கூட மன அழுத்தத்தை போக்கும் தெரியுமா? லிஸ்ட் இதோ - ட்ரை பண்ணுங்க! | Food For Mood Fight Depression

முழு தானியங்கள், பச்சை இலைக் காய்கறிகள், பாதாம், ஆப்பிள், கேரட், தக்காளி மற்றும் வெண்ணெய் ஆகியவை வைட்டமின் ஈ நிறைந்தவை. மூளை மற்றும் புற நரம்பு செல்களைப் பாதுகாப்பதில் முக்கியமானது.

உணவு வகைகள்

முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் மற்றும் மத்தி நீங்கள் உட்கொள்ளக்கூடிய வைட்டமின் டி நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான மூளை செயல்பாட்டை பராமரிக்க உதவும்.

சாப்பாடு கூட மன அழுத்தத்தை போக்கும் தெரியுமா? லிஸ்ட் இதோ - ட்ரை பண்ணுங்க! | Food For Mood Fight Depression

பச்சை இலைக் காய்கறிகள், ப்ரோக்கோலி, வோக்கோசு, எலுமிச்சை மற்றும் பப்பாளி போன்ற சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் காலிஃபிளவர் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் செல்களை பாதுகாப்பதில் நன்மை பயக்கும்.

வால்நட்ஸ், ப்ளூபெர்ரி, முட்டை மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் கட்டுப்படுத்துகிறது. மன விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.