ஃபுட் டெலிவரி செய்யப்போன நபர்; கதவை திறந்த இளம்பெண் - அரங்கேறிய கொடூரம்!
உணவு டெலிவரி நிறுவன ஊழியர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண்(24) ஒருவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
தொடர்ந்து, உணவு பார்சலை வழங்குவதற்காக தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
ஊழியர் கைது
உடனே, அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த உணவு டெலிவரி ஊழியர், பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. உடனே இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், உணவு டெலிவரி ஊழியர் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவிக்குமார் (48) என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.