வீட்டு கரண்ட் பில் விண்ணை தொடுகிறதா? குறைக்க சில பயனுள்ள டிப்ஸ் இதோ!
வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.
கரண்ட் பில்
இந்த காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி ஆகியவை அவசிமான சாதனங்களாகிவிட்டன. அதே சமயத்தில் மின் சாதனங்களை பயன்படுத்துவதால் மின் கட்டணம் சுமார் ரூ 6000 முதல் 8000 வரை வருகிறது.
இதனால் நடுத்தர குடும்பங்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகிறது. எனவே, மின் நுகர்வோர்கள் வீட்டில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியமும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதில் குறிப்பாக, வீட்டில் தேவையில்லாத லைட், ஃபேன்களை அணைகுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே போல, வீடுகளில் பழைய குண்டு பல்புகளைப் பயன்படுத்தாதிர்கள், இந்த பழைய குண்டு பல்புகள் அதிகப்படியான மின்சாரத்தைப் பயனபடுத்துகிறது.
குறைக்க..
அதுமட்டுமில்லாமல் அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வெப்பம் வீட்டில் ஏசியைப் பயன்படுத்துவதற்கான அழுத்தத்தைம் அதிகரிக்கிறது. அதனால், குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துங்கள்.
[00F4KMT
இந்த எல்.இ.டி பல்புகள் சாதாரண பல்புகளைவிட 60 முதல் 80 சதவீதம் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. சாதரண பல்புகளைவிட அதிகம் வெளிச்சம் தருவதோடு, குறைவான மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தருகின்றன. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில், வீட்டில் இரவு நேரங்களில் ஜீரோ வாட்ஸ் பல்ப்கள் பயன்படுத்துவதும் நல்ல பலனை தரும். அடுத்ததாக அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் 2 மின் சாதனங்கள் என்றால் அது ஏசி, பிரிட்ஜ்தான்.
அதனால், பிரிட்ஜை முறையாகப் பயன்படுத்தினால் கட்டணத்தைக் குறைக்கலாம். அடிக்கடி பிரிட்ஜை திறந்து திறந்து மூடாமல், ஒரே நேரத்தில் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்.
டிப்ஸ்
வாஷிங் மெஷினில் துணிகளை அலசுவதற்கும் டிரை செய்வதற்கும் பயன்படுத்தாமல் மேனுவலாக செய்யலாம். வீட்டில், ஏசி 24 மணி நேரமும் பயன்படுத்தாமல், தேவையானபோது மட்டும் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் நிறுத்தி வைத்துவிடலாம்.
உங்கள் வீட்டில் ஏசி இருக்கிறது என்றால் கட்டாயம் ஸ்டெபிலைசர் உபயோகிக்க வேண்டும். தேவையில்லாத நேரங்களில் ஏசியை ஆஃப் செய்து விடலாம். அதே போல, ஏசி அறையில் ஃபேன் போடாதீர்கள்.
வீட்டில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் தேவையான அளவு மட்டும் சூடுபடுத்துங்கள். அதிகம் சூடாக்கி வீணாக்க வேண்டாம். இந்த சின்ன சின்ன டிப்ஸ்களை பயன்படுத்தினால், நிச்சயமக ஓரளவு மின் கட்டணத்தைக் குறைக்கலாம்.