இனி கரண்ட் பில் கட்ட ஈஸியா கட்டலாம்; அதுவும் SMS மூலமா - மின்வாரியம் புது வசதி அறிமுகம்!
மின்வாரியம் மூலம் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியிலேயே (SMS) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
மின் கட்டணம்
பொதுவாக மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் மின் நுகர்வோர் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் புது வசதி ஒன்றை மின்வாரியம் அறிமுகம் செய்யவுள்ளது. மின்வாரியம் மூலம் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியிலேயே (SMS) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புது வசதி
மின்கட்டணம் செலுத்தும் குறுஞ்செய்தி செல்போன் எண்ணுக்கு வந்ததும், அதில் இருக்கும் இணைப்பை (Link) கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் அருகில் உள்ள பெட்டியில் எண்ணை (CAPTCHA) பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து கட்டணம் செலுத்தும் செயல்முறை தொடங்கும்.
அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்து அதன் பிறகு மின்கட்டணத்தைச் செலுத்தி விடலாம். இதன் மூலம் மின் நுகர்வோர் மின்கட்டணத்தை எளிதாகச் செலுத்தலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.