சாலையில் மிதந்த நுரைகள்; திரை போட்டுத் தடுத்த அதிகாரிகள் - தெர்மாகோல் நியாபகம் இருக்கா?

Madurai
By Sumathi Nov 11, 2023 04:35 AM GMT
Report

சாலையில் மிதந்த நுரைகளை தடுக்க அதிகாரிகள் திரை போட்டுத் தடுத்துள்ளனர்.

மிதக்கும் நுரைகள்

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் நுரை நுரையாகப் பொங்கி வந்தது. மேலும், மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாயிலிருந்து திடீரென வெண் நுரைகள் பஞ்சு போன்று சாலையில் பரவியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

foams-floating-road-banned-screening

மேலும், வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பீரோ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன நீர் ஆகியவை கலக்கிறது.

125 கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி அதிரடி!

125 கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி அதிரடி!

திரை போட்டு தடுப்பு

இதனால் கண்மாய் நீர் மாசடைந்து இதுபோன்ற வெண் நுரை பொங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், கால்வாயில் இருந்து வெளியேறும் நுரை வாகன ஓட்டிகள் மீது படாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் திரை போட்டுள்ளனர்.

madurai

நீர் நிலையில் ரசாயனக் கழிவுகள் கலப்பதைத் தடுத்து நிறுத்துவதை விட்டுவிட்டுத் திரை போட்டு நுரையைத் தடுத்து என்ன பயன்? என மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை நீர் ஆவியாகாமல் தடுக்க அங்கு தெர்மாக்கோல் பரப்பியது குறிப்பிடத்தக்கது.