கிளாம்பாக்கத்தில் வரப்போகும் பெரிய மாற்றம் - முக்கிய முடிவெடுத்த அரசு!
கிளாம்பாக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
கிளாம்பாக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக ஜிஎஸ்டி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து சென்னை மார்க்கமாக செல்லும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் தற்போது அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று யு (U) வடிவ வளைவில் திரும்பி, சென்னை நோக்கி சென்று வருகின்றன.
இதனால் தேவையற்ற கால விரயமும், போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரில் ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக
இது எங்கள் வாழ்வாதாரம் சார் - தயவு செஞ்சி காப்பாத்துங்க..! அமைச்சரின் காலில் விழுந்து கெஞ்சிய பெண்கள்..!
உயர்மட்ட மேம்பாலம்
ஒரு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இவ்வாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகள் முடிவுபெறும் போது, பாதசாரிகள் ஜி.எஸ்.டி. சாலையை எளிதாக கடக்கவும் வழிவகை ஏற்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் அப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் அப்பகுதியில் சாலையைக் கடந்து வருகின்றனர்.
இதற்கு தற்காலிக ஏற்பாடாக, போக்குவரத்து காவல்துறை மூலம் காவலர்கள் உதவியுடன் குறிப்பிட்ட இடைவெளியில் பொதுமக்கள் சாலையைக் கடக்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.