குழந்தைகளின் அறிவாற்றலை குறைக்கும் குடிநீரில் உள்ள ஃப்ளோரைடு - ஆய்வில் ஷாக்!
தண்ணீரில் இருக்கும் fluoride பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
fluoride
தண்ணீரில் இருக்கும் fluoride காரணமாக ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்ய வங்கதேசத்தின் கிராமப்புறங்களில் 500 தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து உளவியலாளர்கள் சில சோதனைகளைப் பயன்படுத்தி 5 மற்றும் 10 வயதுடைய குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மதிப்பீடு செய்தனர். சிறுநீர் மாதிரிகளை மதிப்பிடுவதன் மூலம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் fluoride வெளிப்பாட்டை அறிந்தனர்.
அறிவாற்றல் திறன்
அதன்படி, கர்ப்பிணிப் பெண்களின் சிறுநீரில் ஃப்ளோரைட்டின் சராசரி செறிவு 0.63 மி.கி/லி என்று கண்டறியப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களில் ஃப்ளோரைட்டின் செறிவு அதிகமிருப்பது ஐந்து மற்றும் பத்து வயதுடைய அவர்களின் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் குறைவதோடு தொடர்புடையதாக இருக்கலாம் என ஆராயப்படுகிறது.
அதேபோல் பத்து வயதிற்குள் சிறுநீரில் 0.72 மி.கி/லிட்டருக்கு மேல் ஃப்ளோரைடு இருந்த குழந்தைகள், சிறுநீரில் ஃப்ளோரைடு குறைவாக இருந்த குழந்தைகளை விட குறைவான அறிவாற்றல் திறன்களை கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக குழந்தைகளுக்கு, fluoride-ஆல் ஏற்படும் சுகாதார அபாயங்களை மதிப்பாய்வு செய்வதற்கான வலுவான அடிப்படையை உருவாக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என டாக்டர் கிப்லர் கூறியுள்ளார்.