திருமணம் செய்யாமல் தயாரிப்பாளருடன் குடும்பம் - சித்ரவதையால் தப்பி ஓடிய நடிகை!
பிரபல நடிகை, தயாரிப்பாளர் மீது கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
லிவ்-இன்
தமிழில் குசேலன், குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஃப்ளோரா சைனி. மேலும், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர் கெளரங் தோஷி என்பவரை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
தொடர்ந்து கருத்து வேறுபாடால் பிரிந்து வந்துவிட்டார். இந்நிலையில், அவர் மீது இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், `பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தேன் .ஆனால் அவருடன் சேர்ந்து வாழ்ந்த போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. என்னைக் கடுமையாகத் திட்டினார். அதோடு என் முகம் மற்றும் அந்தரங்க உறுப்பில் குத்தினார்.
குற்றச்சாட்டு
எனது மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டு என்னை படங்களில் நடிக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தினார். கடந்த 14 மாதங்களாக என்னை யாரிடமும் பேசவிடவில்லை. ஒருமுறை அவர் என்னை வயிற்றில் ஓங்கிக் குத்தியபோது அங்கிருந்து தப்பி ஓடிவந்துவிட்டேன். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர எனக்கு பல மாதங்கள் பிடித்தது.
இப்போது என் பெற்றோருடன் இருக்கிறேன். படிப்படியாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். அதற்கு நேரம் எடுத்துக்கொண்டது. ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதோடு எனக்கு புதிய காதலும் கிடைத்திருக்கிறது.
வாழ்க்கையை முன்னோக்கி மட்டுமே எடுத்துச்செல்ல முடியும். சில படிப்பினைக்கு பிறகு தான் உங்கள் வாழ்க்கையில் நல்லவை நடக்கும். வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் என்பதை நம்பாமல் இருக்காதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

இளைஞன் மீது தாக்குதல் : தப்பிச் சென்ற டீச்சர் அம்மாவை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் IBC Tamil
