வெள்ளத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் - 95 பேர் பலியான பரிதாபம்!
ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 95 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ள பாதிப்பு
கடந்த 10 நாட்களாக 10 மாகாணங்களில் கொட்டி தீர்த்துவரும் கனமழை காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர். கனமழை காரணமாக அந்நாடே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதனால் கடந்த ஜூன் மத்தியிலிருந்து இதுவரை 820 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பேரிடர் கழகம் தெரிவித்துள்ளது. உதவி அமைப்புகள் உதவிசெய்ய முன் வந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண் கழக துணை மந்திரி சராபுதீன் சி.என்.என்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
95 பேர் உயிரிழப்பு
இந்த வாரம் மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 8 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாகவும் மேலும் பல குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நிறுவனம் ஆகஸ்ட் 23 அன்று கூறியுள்ளது.

தொடர் மழை காரணத்தால் தற்போது 95 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், மேலும் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அணைத்து வேளாண் நிலங்கள் மற்றும் பழ தோட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கி முற்றிலும் அழிந்து போய்விட்டது.
மக்கள் அவதி
வெள்ளத்தால் கால்நடைகள் அடித்துச்செல்ல பட்டதாகவும் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குளிர்காலம் நெருங்கியுள்ள சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்குவதற்கு இட வசதி இல்லை எனவும்,

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை எனில் நிலைமை மோசமடையக்கூடும் என சராபுதீன் தெரிவித்துள்ளார். ஆப்கானித்தானில் இந்த ஆண்டு இயற்கை பேரிடர் காரணங்களால் அந்நாடே தத்தளித்து வருகிறது.
வறட்சி உள்பட பூகம்பம் உள்ளிட்ட பேரிடர்கள் காரணமாக பல உயிர்கள் பிரிந்துள்ளனர். ஜூன் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 1000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பது கவனிக்கத்தக்கது.