திடீரென நிறுத்தப்பட்ட வெள்ள நிவாரண நிதி..? அமைச்சர் அளித்த விளக்கம்
தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பால் வழங்கப்பட்டு வந்த நிவாரண நிதி வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண நிதி
தென் மாவட்டங்கள் - திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் வரலாறு காணாத மழையினால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் பல மக்கள் வாழ்க்கையை பெரிதும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தான் அரசின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பிற்கேற்ப நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. குறிப்பிட்ட வட்டங்களில் அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் 6000 ரூபாய் முதல் சில பகுதிகளுக்கு 1000 ரூபாய் எனவும் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இப்பணிகள் இன்று மட்டும் நிறுத்தப்படுவதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நேற்று(31-12-2023) செய்தியாளார்களை சந்தித்த அவர் பேசும் போது, நெல்லை மாவட்டத்தில் நிவாரணம் வழங்கும் பணி தொடங்கிய 2 நாளில் 3 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிறுத்தம்
மாவட்டத்தில் 840 நியாய விலை கடைகளின் மூலம் 5 லட்சத்து 4,357 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண நிதி வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 அட்டைதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், 1 லட்சத்து 63 ஆயிரத்து705 பேருக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது என்றார்.
ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்றும் பணியாளர்கள் மூலம் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நாளைய(01-01-2024) தினம் புத்தாண்டு என்ற காரணத்தினால் விடுமுறை விடப்பட்டுள்ளது நாளை மறுநாள் முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.