திடீரென உடைந்த உக்ரைன் அணை, ரஷ்யாவின் சதியா? - போருக்கு மத்தியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

Ukraine Russia
By Vinothini Jun 07, 2023 06:26 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

உக்ரைன் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள அணை திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போர்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையிலான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

flood-in-ukraine-nova-kakhovka-dam-breached

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் அணை திசீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணை உடைப்பு

இதனை தொடர்ந்து, உக்ரைனில் உள்ள கார்சன் மாகாணத்தில் கக்ஹொவ்ஸ்கா என்ற அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

flood-in-ukraine-nova-kakhovka-dam-breached

மேலும், இந்த அணை ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் உள்ளது.

இருநாட்டிற்கும் இடையில் போர் நடந்து வரும் நிலையில், இவாறு நடந்தது இரு நாடும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறது.

தொடர்ந்து, இந்த அணையை உடைத்தது எந்த நாடு என்றும் இல்லை அது தானாக உடைந்ததா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.