50 ஆண்டுகளில் இல்லாத கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் சஹாரா பாலைவனம்!
சஹாரா பாலைவனத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி உள்ளது .
சஹாரா பாலைவனம்
உலகத்திலேயே மிகப்பெரிய பாலைவனம் சஹாரா பாலைவனம் தான்.சஹாரா என்றால் நம் நினைவுக்கு வருவது வறட்சி, வெயில், மணற்பரப்பு போன்றவை தான். சஹாரா பாலைவனத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அங்கு ஓர் உயிரினம், வாழ்வது என்பது கடினமாகும்.
இப்படிப்பட்ட வறண்ட வானிலையில் அரிதாக மழை பெய்யும் . சஹாரா பாலைவனத்தைப் பொறுத்தவரை மொராக்கோ நாடு தான் மிக முக்கியமானதாகும். இந்த நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சுற்றுலாப்பயணிகளுக்குப் பிடித்த இடமாகக் கருதப்படுகிறது.
இந்த பாலைவனத்தில் பேரிட்சை மரங்கள் மட்டுமே அதிக அளவில் காணப்படும். இந்த பகுதியில் எப்போதாவது அபூர்வமாகவே மழை பெய்யும். அந்த வகையில் மொராக்கோ நாட்டில் உள்ள இரிக்கி பாலைவன ஏரியில் 50 ஆண்டுகளாக பிறகு தற்போது நீர் நிரம்பிக் காணப்படுகிறது.
கனமழை
இங்குச் சராசரியாக ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை விடக் கூடுதலாகக் கனமழை பெய்தது. இதனால் பாலைவனத்தில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குட்டைகளாகக் காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளன.
இதுகுறித்த மொராக்கோ நாட்டு வானிலை மைய நிபுணர்கள் கூறியதாவது: முன் எப்போதும் இல்லாத ஒன்று. பருவகால மாறுபாட்டால் ஏற்பட்டு இருக்கலாம்.
கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. மிகக் குறுகிய காலத்தில் இப்போதுதான் நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.