அமைதிக்கான நோபல்; ஜப்பான் அமைப்பு தேர்வு; சாதித்தது என்ன?

Japan Sweden Nuclear Weapons Nobel Prize
By Karthikraja Oct 11, 2024 10:39 AM GMT
Report

 அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடான்க்யோ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. 

நோபல் பரிசு

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

இயற்பியலுக்கான நோபல் பரிசு - தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் தேர்வு

இயற்பியலுக்கான நோபல் பரிசு - தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் தேர்வு

அமைதிக்கான நோபல்

மருத்துவம், இயற்பியல் வேதியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 2024 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடான்க்யோ(Nihon Hidankyo) அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லா உலகை உருவாக்குவதற்கு அந்த அமைப்பு எடுத்து வரும் முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் அகாடமி அறிவித்துள்ளது. 

இந்த அமைப்பிற்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.