திடீர் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஊர், சிக்கி தவிக்கும் மக்கள் - 26 பேர் பலி!

Afghanistan Death
By Vinothini Jul 24, 2023 10:00 AM GMT
Report

 திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 26 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

ஆப்கானிஸ்தான் நாட்டில் திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பல வீடுகள் சேதமடைந்தன, மேலும் அங்குள்ள ஜல்ரேஸ், சாக், ஜகாதோ உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

flood-in-afghanisthan

இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர், 26 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், பலர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் சேதம்

இந்நிலையில், பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

flood-in-afghanisthan

இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரிதளவு சேதமடைந்துள்ளது. இதில் மொத்தம் 604 வீடுகள் சேதமடைந்துள்ளது" என்று கூறியுள்ளனர்.