Friday, Jul 11, 2025

வெப்பத்தால் தவித்த சென்னைவாசிகள் - திடீரென குளிர்வித்த மழை

Chennai Regional Meteorological Centre
By Thahir 2 years ago
Report

சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம் எனவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னையை பொறுத்தவரை  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சென்னையில் திடீர் மழை

இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.  வடபழனி, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி,போரூர், அண்ணா சாலை, அசோக் நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

Sudden rain in Chennai

சென்னையின் புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில், வண்டலுார், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

3 மணி நேரத்திற்கு மழை தொடரும் 

இந்த நிலையில் நாமக்கல், திண்டுக்கல், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் மழை தொடரும் எனவும்,

கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 3 மணி நேரம் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.