Gpay - PhonePe போட்டியாக வந்த Flipkart Pay - இவ்வளவு வசதிகளா..?
UPI payments தற்போது அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
Flipkart UPI
உலகம் நவீனமயமாவதை தொடர்ந்து பல மாற்றங்களும் நடைபெற்று வருகின்றது. இந்த மாற்றங்களை நாம் ஏற்பதில்லை என்று ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையலும், அதற்கு தங்களை இன்னும் பிற மக்கள் பழக்கி கொள்கிறார்கள்.
அப்படி மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது மக்களின் அத்தியாவசிய ஒன்றாகவே மாறியுள்ளது UPI payments. சிறிய டீ கடை முதல், பெரிய பெரிய மால்களில் கூட இவ்வகையான பணப்பரிவர்த்தனை பயன்பாட்டில் வந்துவிட்டது.
இதில் பல விதமான payment வழிகளும் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றது. அனைத்து வகை தொழிலை போல இதிலும் போட்டி நிலவுகின்றது.
இந்நிலையில், தான் பிரபல flipkart நிறுவனம் axis வங்கியுடன் இணைந்து, இணையதளம் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் வழி வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 31-க்கு பிறகு Google Pay, Paytm, Phonepe பயன்படுத்த முடியாது?? - மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை ..!!
வசதிகள்
சந்தையில் அமேசான் நிறுவனத்துடன் போட்ட போட்டி நடத்தி வரும் flipkart தற்போது amazon pay முறைக்கு போட்டியாக தனது பிரத்யேக "Flipkart UPI"வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Flipkart UPI மூலம் e-commerce சேவை மட்டுமன்றி, flipkart'இன் Myntra, Flipkart health போன்றவற்றிலும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதனை தாண்டி, மற்ற பிற UPI சேவைகளை போலவே பணம் அனுப்புதல் - பெறுதல், மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளும் Flipkart UPI வழங்குகிறது.