விமானத்தில் வேலை செய்யாத ஏசி; வியர்வைய துடைக்க என்ன செஞ்சாங்க தெரியுமா - நடுவானில் பரபரப்பு!

Punjab
By Sumathi Aug 07, 2023 04:17 AM GMT
Report

விமானப் பயணத்தின்போது ஏசி வேலை செய்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

ஏசி வேலை செய்யல 

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E7261 என்ற விமானம் பஞ்சாப், சண்டிகரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்தது. பயணிகள் உள்ளே சென்று அமர்ந்தபோது எதிர்பாராமல் விமானத்திற்குள் ஏ.சி எதுவும் வேலை செய்யவில்லை.

விமானத்தில் வேலை செய்யாத ஏசி; வியர்வைய துடைக்க என்ன செஞ்சாங்க தெரியுமா - நடுவானில் பரபரப்பு! | Flight Runs With No Air Conditioner Viral Video

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கடும் வெப்பத்தால் வந்த வியர்வையை துடைப்பதற்கு பணிப்பெண்கள் டிஷ்யூ பேப்பர்களை பயணிகளுக்கு அளித்தார்கள்.

கடும் அவதி

இந்த காட்சிகளையெல்லாம் போனில் வீடியோவாக பதிவு செய்த பஞ்சாக் காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அமரிந்தர் சிங் ராஜா வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘மிகவும் மோசமான அனுபவத்தை சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் விமானத்தில் அனுபவிக்க நேர்ந்தது.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சம்பந்தப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.