உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து விமானப் பயணம் மேற்கொண்ட நபர் - பணியாளருடன் வாக்குவாதம்

innerwearasmask
By Petchi Avudaiappan Dec 17, 2021 06:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம் முகத்தை மறைத்த விமானப் பயணி ஒருவருக்கும், விமான பணியாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அமெரிக்காவின் ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஆடம் ஜேன் என்ற பயணி நேற்று முன்தினம் பயணித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையான அணியப்படும் மாஸ்க்கிற்கு பதிலாக ஜேன் உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்துள்ளார். 

அவரைப் பார்த்த பணிப்பெண் நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள். உங்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன் முடிவில் ஆடம் ஜேன் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். அவருக்கு ஆதரவாக சில விமான பயணிகளும் கீழே இறங்கி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளாடையை மாஸ்க்காக அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. விமானத்திற்குள்ளே வரும் வரை மாஸ்க் அணிகிறார்கள்.

ஆனால் உள்ளே சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் மாஸ்க்கை கழட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்கள் மாஸ்க் அணியவில்லை என்றுதானே அர்த்தம். ஏன் இந்த முரண்பாடு என ஜேன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 

உள்ளாடை அணிந்து விமானத்தில் ஏறிய ஆடம் ஜேன் விவகாரம் அமெரிக்காவில் வைரலாகியுள்ளது.