35,000 அடி உயரத்தில் பறந்த விமானம் - சீட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட பயணிகள்

United States of America Sweden Denmark Flight
By Karthikraja Nov 15, 2024 06:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 டர்புலன்ஸ் காரணமாக பயணிகள் விமான இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

டர்புலன்ஸ்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் விமான நிலையத்திலிருந்து அதிகாலை 12.03 மணியளவில் அமெரிக்காவின் மியாமி நகருக்கு ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 

flight turbulance

விமானம் புறப்பட்ட 4 மணி நேரத்தில், ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டுள்ளது. 

உலகிலேயே சிறிய விமான சேவை; பயண நேரம் 90 நொடி மட்டுமே - எங்கு தெரியுமா?

உலகிலேயே சிறிய விமான சேவை; பயண நேரம் 90 நொடி மட்டுமே - எங்கு தெரியுமா?

தரையிறங்கிய விமானம்

35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, கடுமையான டர்புலன்ஸ் காரணமாக பயணிகள் தங்களது இருக்கையில் இருந்து மேல் நோக்கி தூக்கி வீசப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

கடுமையான டர்புலன்ஸ் காரணமாக மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாத நிலையில், டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.