விமானத்தில் வினோதமாக நடந்துக் கொண்ட பயணிகள் - புரியாமல் ஷாக்கில் உறைந்த பனிப்பெண்கள் !
விமானத்தில் வினோதமாக நடந்துக் கொண்ட பயணிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
பயணிகள்
பேருந்து, ரயில், கப்பல் என பல வகையான போக்குவரத்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் வெகு தூரத்திற்கு செல்வதென்றால் விமான பயணத்தையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். தொலைதூர நாடுகளுக்கு விமான பயணம் மட்டுமே ஒரே தேர்வாக இருக்கும்.
விமானம் என்பது மிகவும் காஸ்டலியான மற்றும் சிறந்த பயணம் தான் நினைவிற்கு வரும். பலருக்கு ஒரு முறை விமானத்தில் பயணம் செய்து விட வேண்டுமென ஆசை இருக்கும். ஏனென்றால் இதற்கென ஒரு தனி மவுசு இருக்கிறது.
இப்படியாக் ஒரு விமான பயணத்தில் பயணிகள் வித்தியாசமாக நடந்து கொண்டதும் அதை பார்த்து பனிப்பெண்கள் பதறிய சம்பவம் அறங்கேறியுள்ளது. அதாவது, சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில் இப்படி ஒரு விசித்திரம் நடந்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது முதல் சேவையை குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. விமான சேவை தொடங்கிய முதல் நாளிலேயே விமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது.
பனிப்பெண்கள்
இந்த பயணிகள் சூரத்திலிருந்து பாங்காக்கிற்கு பயணம் செய்த அனுபவத்தை வெகுவாக ரசித்தனர். இதையடுத்து, பயணிகள், விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்த விமானத்தில் இருந்த பயணிகள் 4 மணி நேரங்களிலேயே விமானத்தில் கொடுக்கப்படும் அனைத்து மதுபாட்டில்களையும் தீர்ந்துவிட்டனர். அது மட்டுமின்றி, ஸ்நாக்ஸ்களும் முடிந்தது. பயணிகள் இவ்வளவு மது அருந்தியதால் விமான பணிப்பெண்களும் ஆச்சரியமடைந்தனர்.
விமானத்தில் இருந்த பயணிகள் மொத்த மதுபானம் மற்றும் குஜராத் தின்பண்டங்களையும் சாப்பிட்டனர். இந்த தகவலின்படி, விமானத்தில் மொத்தம் 300 பயணிகள் இருந்தனர். அவர்கள் 1.8 லட்சம் மதிப்புள்ள 15 லிட்டர் மதுபானம்
மற்றும் சில பிரபலமான தேபலா மற்றும் காமன் போன்ற குஜராத்தி ஸ்னாக்ஸ்களை சாப்பிட்டு முடித்து விட்டனராம். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.