நடுவானில் 67 பேர்..திடீரென தீப்பற்றி எரிந்த விமானம் - பயணிகளின் நிலை என்ன?
விமனானாம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பற்றிய விமானம்
நியூசிலாந்த் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் எனப்படும் ஆஸ்திரேலியா விமானம் ஒன்று இரவு புறப்பட்டது. இதில் 67 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், புறப்பட்டு சில நிமிடங்களில் விமானம் நடுவானில் திடீரென தீப்பற்றியது. இதனால் ஒரு என்ஜின் முழுவதும் செயல் இழந்தது. இதனையடுத்து, விமானம் அவசர அவசரமாக நியூசிலாந்தின் இன்வர்கார்கில் தரையிறக்கப்பட்டது.
நிலை என்ன?
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.அதன்பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என விமான நிறுவனம் தெரிவித்தது.
இதை தொடர்ந்து, பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அவர்களை மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் எஞ்சின் மீது பறவைகள் மோதியது தான் இதற்கு கரணம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.