இவ்வளவு கேவலமாவா.!! விமானத்தில் நடக்கும் அசிங்கமான செயல்கள் - ஓப்பனாக சொன்ன பணிப்பெண்

Flight
By Karthick Dec 25, 2023 04:24 AM GMT
Report

விமானத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் தான் தனது பணியின் போது சந்தித்த சில அருவெறுக்கத்தக்க விஷயங்களை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

விமான பணிபெண்ணின் வருத்தம்

இன்றும் பலருக்கு விமான பயணம் என்றால் பெரும் கனவே ஆகும். ஒருமுறையாவது விமானத்தில் பயணித்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் கூட பலர் உள்ளனர்.

flight-attendar-shares-most-ugliest-experience

ஆனால், அப்படியான விமானத்தில் என்னென்ன அருவெறுக்க தக்க செயல்கள் நடக்கின்றன என்பது நமக்கு தெரிந்தால், அந்த பயணம் நம்மில் யாருக்காவது பெரிதாக ஆர்வத்தை தூண்டுமா..? சந்தேகத்திற்குரிய கேள்வி தான்.

அருவெறுப்பான செயல்கள்

அப்படி சந்தேகிக்கவைக்கும் வகையில் விமான பணிப்பெண் ஒரு எழுதிய புத்தகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரிகா மிகுசோவா என்ற அந்த பெண் 5 ஆண்டுகள் விமான பணி பெண்ணாக பணிபுரிந்துள்ளார். தனது பயணத்தில் அவர் சந்தித்த பல அருவெறுப்பான செயல்கள் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அப்புத்தகத்தில், ஒருமுறை தன்னுடைய துருக்கி பயணத்தின் போது, மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

flight-attendar-shares-most-ugliest-experience

அதே போல, பயணிகள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது, பெண் ஒருவர் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கினார். அவரிடம் தான் சைகை கட்டியதாக குறிப்பிட்ட மரிகா, அதற்கு பெண் பிரச்சனை இல்லை, என் வேலை முடிந்தது சைகை கட்டியதாகவும் தனது புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.