சதையை உண்ணும் கொடிய பாக்டீரியா - கவனிக்காமல் விட்டால் இரண்டே நாளில் உயிரிழப்பு

Japan Death Disease
By Karthikraja Jun 18, 2024 11:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' எனும் சதையை உண்ணும் அரிதான பாக்டீரியா தொற்று இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் இந்த பாக்டீரியா 1999ல் ஜப்பானில் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ஜப்பானியர்களிடையே இது வேகமாக பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. 

flesh eating streptococcus bacteria japan

காய்ச்சல், தசை வலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த பாக்டீரியா தொற்றால் ஏற்படும் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட பிறகு முக்கிய அறிகுறிகளாகும். தொண்டை வலி, உறுப்பு செயலிழப்பு, உடல் வீக்கம், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆபத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி நிலையத்தில் உள்ள பிரச்சனை

ஆபத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி நிலையத்தில் உள்ள பிரச்சனை

தொற்று பரவல்

இந்த தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்து உண்பவர்களுக்கும் எளிதில் பாதிப்பு ஏற்படுவதாக ஜப்பான் தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

flesh eating streptococcus bacteria japan

அடிக்கடி கைகளைக் கழுவுதல், இருமல் அல்லது தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் போன்ற பழக்கவழக்கங்கள் மூலம் இந்த பக்டீரியா தொற்றை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு

இது குறித்து, டோக்கியோ மருத்துவ பல்கலைக் கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியர் கென்கிகுச்சி கூறியதாவது, இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகும் நபர்களுக்கு, முதலில் காலில் வீக்கம் காணப்படுகிறது; சில மணி நேரங்களில் அது முழங்கால் வரை விரிவடைகிறது. அவர்களில் பெரும்பாலானோர் 48 மணி நேரத்திற்குள் இறக்கின்றனர்.

தற்போது ஜப்பானில் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000த்தை நெருங்கியுள்ளதாகவும்,, இந்த எண்ணிக்கை 2,500ஐ எட்டக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் இறக்க வாய்ப்பு உள்ளது என அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளனர்.