சொர்க்கத்தில் வீடு மனைகள்..கடவுளுக்கு மிக அருகில்; சதுரடி $100 - வாங்க குவிந்த மக்கள்!
சொர்க்கத்தில் வீடு மனைகளை ஒரு சதுரடி 100 டாலருக்கு தேவாலயம் விற்பனை செய்து வருகின்றனர்.
சொர்க்கத்தில் வீடு
மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சொர்க்கத்தில் அமைந்துள்ள வீடு மனைகளை ஒரு சதுரடி 100 டாலர் (சுமார் 8,336 ருபாய்)என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது இக்லேசியா டிஎம்போஸ் என்ற தேவாலயத்தில் தான் இப்படி ஒரு விற்பனை நடந்து வருகிறது. இதன்மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த தேவாலயத்தில் உள்ள பாதிரியார் ஒருவர்,
சதுரடி $100
தான் கடவுளை நேரில் சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி இந்த விற்பனையை செய்ய தொடங்கியுள்ளார். அங்கு இருக்கும் மனைகளில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள்,
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளன. இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கிய நிலையில்,
This Christian church in Mexico is selling plots of land in heaven, starting at $100 per square metre. ? pic.twitter.com/uwnHzJBZqh
— MeetCBN 2 (@oneheirs2) June 27, 2024
இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது என தெரியவந்தது. ஆனால் இதனை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.