மாயமான ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கொடி மரம், சிலைகள்...! கோயில் அதிகாரி புகார்..!
பிரபலமான ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலின் கொடி மரம், சிலை போன்றவை காணவில்லை என கோவில் அதிகாரி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில்
தமிழ்நாடு அரசு சின்னத்தில் இடம்பெறுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் சிறப்பு சொல்லி தெரியவேண்டியதில்லை. மாநிலத்தில் மக்களை கவர்ந்த மிகவும் முக்கிய கோயிலாகவும், முக்கிய சுற்றுலாத்தலமாகும் இக்கோவில் நீடிக்கிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பழைய கொடிமரங்களை காணவில்லை என கோவில் அதிகாரி மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த காரியத்தில், கோயிலில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்ட சகோதரர்கள் ரமேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தான் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பிரசித்தி பெற்ற கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.