அயோத்தி ராமர் கோயில் - கதவுகளை வடிவமைத்த தமிழர்கள் குறித்து தெரியுமா.?
அயோத்தி ராமர் கோயில் மரக்கதவுகளை தமிழநாட்டைச் சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் மற்றும் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
கோவில் கதவுகள்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த கோவிலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களை குடைந்து ராமர் , சீதைக்கு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலின் நுழைவு பகுதி, பக்கவாட்டு மண்டபம், முன்மண்டபம், வெளியே வரும் வழி,ராமர்-சீதை கருவறைகள், லட்சுமணன் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு 44 மரக்கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கதவுகளை தமிழ்நாட்டை சேர்ந்த மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மரச்சிற்ப்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்...
அயோத்திக்கு நேரில் 50க்கும் மேற்பட்டவர்களை அழைத்து சென்று தங்கி பணியை முடித்ததாக ரமேஷ் கூறினார்.
கதவை குறித்து பேசிய அவர், பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய தேக்கு மரங்களை மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மண்டப கதவுகளில் 2 யானைகள், 2 தேவ கன்னிகை வரவேற்ப்பது போலவும், தாமரை மலர்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரமேஷ் தெரிவித்தார்.
[
இதைத் தவிர,பிரதான வாயிலுக்கு 8 அடி உயரத்தில் 12 அடி அகல அளவில் மயில் சிற்ப்பங்கள் அலங்கரித்ததுடன் நான்கு மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ரமேஷ் தெரிவித்தார்.
வியக்கும் வகையில் முகப்பு மண்டல மேல் தளப் படிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறிய பல்லக்கை கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை கொண்டு செல்ல செய்து கொடுத்துள்ளதாகவும் ரமேஷ் கூறியுள்ளார்.