பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் மாரடைப்பால் மரணம் - நெட்டிசன்கள் ஷாக்!
பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
லாரிசா
பிரேசிலைச் சேர்ந்தவர் பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர் Larissa Borges(33). உடற்பயிற்சியிலும் தனது ஃபிட்னசிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், இவர் கிராமடோ என்ற நகரத்தில் பயணம் செய்யும் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் லாரிசா கோமா நிலைக்கு சென்று விட்டார்.
மாரடைப்பு
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார்.

இது தொடர்பான செய்தியில் அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டிருப்பதாவது, " மிகவும் அன்பான ஒருவரை, வெறும் 33 வயதிலேயே இழந்த வலி எங்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. எங்கள் இதயங்கள் மிகவும் உடைந்து போயிருக்கிறது.
லாரிசாவை இழந்து நாங்கள் உணரும் ஏக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த லாரிசா, தன் உயிருக்காக கடைசி வரை தைரியமாக போராடினாள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்ட போது போது குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று வெளியாகியுள்ளது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம் IBC Tamil
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil