ஒரே வருடத்தில் மளமளவென 45 கிலோ எடை குறைத்த பிரபல ஃபிட்னஸ் ஆலோசகர் திடீர் மரணம் - என்ன காரணம் தெரியுமா?

Brazil Instagram Death
By Vinothini Sep 21, 2023 06:25 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஃபிட்னஸ் பிரபலம் ஒருவர் உடல் எடையை வேகமாக குறைத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலம்

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அட்ரியானா தைசென், இவர் ஃபிட்னெஸ் மற்றும் எடையிழப்பு தேவைகளுக்கு இவர் ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதனால் இன்ஸ்டாகிராமில், இவரால் பயன்பெறுவோர் பிரேசிலை தாண்டியும் பரவியிருந்தனர்.

fitness-influencer-adriana-thyssen-dead

இவர் தனது 39வது வயதில் 100 கிலோ எடையுடன் அவதிப்பட்டபோது பல்வேறு சாத்தியங்களை பரிசீலித்த இவர், பின்னர் நடப்பில் உள்ள பலவற்றையும் கலந்து புதுவித பயிற்சி முறைகளை உருவாக்கினார். தீவிர டயட் மற்றும் உடற்பயிற்சிகள் வாயிலாக உடல் எடையை குறைக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றார். அவ்வாறு ஒரே வருவதில் இவர் 45 கிலோ எடையை குறைத்து சாதனை செய்தார்.

மரணம்

இந்நிலையில், சீரான உணவு மற்றும் கடுமையான உடற்பயிற்சி முறையை உள்ளடக்கிய தனது எடை இழப்பு அனுபவங்களை, பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று கூறி வந்தார். அதனால் பலரும் அவரை பின்பற்றினர். தற்பொழுது அவர் திடீரென இறந்துள்ளார், அட்ரியானாவின் தீவிர எடையிழப்புக்கான பிரயத்தனங்களே அவரது அகால மரணத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

fitness-influencer-adriana-thyssen-dead

எடையிழப்பு முயற்சி காரணமாக புதுவகை நோயில் அட்ரியனா விழுந்ததும், அதிலிருந்து மீள முடியாது போனதும் அவரது மரணத்துக்கு காரணமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது குடும்பத்தினர் தரப்பில், அட்ரியனா மரணம் குறித்து உறுதியான தகவல் தெரிவிக்கவில்லை.