ஒரே மீன்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான நபர் - அப்படி என்ன ஸ்பெஷல்?
மீனவர் ஒருவர் அரிய வகை மீனை விற்றதால் கோடீஸ்வரரானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்
பாகிஸ்தான், கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச். இவர் கடந்த திங்கட்கிழமை அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது தங்க மீன்கள் என்று அழைக்கப்படும் அரிய வகையான சோவா மீன்கள் ஹாஜி பலோச் வலையில் சிக்கியுள்ளது.
இதனை எடுத்த அந்த மீனவர் கராச்சியில் உள்ள துறைமுகத்தில் இந்த அரிய வகையான சோவா மீனை ஏலம் விட்டுள்ளார்.
அரிய வகை
இந்நிலையில், இந்த சோவா மீன்கள் 7 கோடி ரூபாய் வரை ஏலம் போனது. இதனால் அந்த மீனவர் ஹாஜி பலோச் ஒரே இரவில் கோடீசுவரராக மாறியுள்ளார். இந்தப் பணத்தைத் தன்னுடன் கடலுக்கு வந்த 7 மீனவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரியவகை சோவா மீன் மிகவும் அரிதானதாகவும், அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் மருத்துவ குணாதிசயங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த அரியவகை மீன் பல கோடிக்கு விலைபோனது.