கழுத்தை கிழித்து தோளுக்கு மேல் வந்த மீன் முள் - சூப் குடித்தபோது தொண்டையில் விபரீதம்

Thailand
By Sumathi Jul 01, 2025 11:47 AM GMT
Report

பெண்ணின் கழுத்தை கிழித்து கொண்டு மீன் முள் வெளியே வந்துள்ளது.

மீன் சூப் 

தாய்லாந்தை சேர்ந்தவர் சூரியன். இவரது மனைவி(45) ஆசையாக மீன் சூப் வாங்கி பருகியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் மீன்முள்ளை விழுங்கியதில் அது சிக்கியுள்ளது.

கழுத்தை கிழித்து தோளுக்கு மேல் வந்த மீன் முள் - சூப் குடித்தபோது தொண்டையில் விபரீதம் | Fishbone Stuck In Womans Throat Thailand

இதனால் வலி ஏற்பட்டு, அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு மீன் முள்ளை வெளியே தள்ள முயன்றார். வாழைப்பழத்தையும் சாப்பிட்டு பார்த்தார். னது விரலை வாயிற்குள் செலுத்தி வாந்தி எடுக்க முயன்று எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.

ஒரு மாதமாக உயிருடன் புழுவை வாந்தி எடுத்த சிறுமி - பரிசோதனையில் மருத்துவர்கள் ஷாக்!

ஒரு மாதமாக உயிருடன் புழுவை வாந்தி எடுத்த சிறுமி - பரிசோதனையில் மருத்துவர்கள் ஷாக்!

பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

எனவே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் தொண்டையில் மீன் முள் எதுவும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வலியுடன் 2 வாரங்கள் கழிந்த நிலையில் அவரது கழுத்தில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.

கழுத்தை கிழித்து தோளுக்கு மேல் வந்த மீன் முள் - சூப் குடித்தபோது தொண்டையில் விபரீதம் | Fishbone Stuck In Womans Throat Thailand

மேலும், தொண்டையில் சிக்கிய மீன் முள் கழுத்தை குத்தி கிழித்து தோளின் மேல்புறம் வந்திருப்பதை அறிந்துள்ளார். இதனையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்றதில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மீன் முள்ளை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் சூரியன் தனது முகநூல் பக்கத்தில், ‛‛சின்ன ஒன்று சீரியஸான பாதிப்பை ஏற்படுத்தலாம். மீன் சாப்பிடும்போது மக்கள் கவனமாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கூட போகலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.