தடை அதை உடை: வழக்கறிஞரான முதல் திருநங்கை - குவியும் பாராட்டுகள்

Kerala Transgender
By Sumathi Mar 22, 2023 05:06 AM GMT
Report

முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்மலெட்சுமி.

வழக்கறிஞர்

கடந்த 2019-ம் ஆண்டு சட்டக்கல்லூரியில் ஆண் மாணவராகவே சேர்ந்தவர், கல்லூரி இறுதியாண்டில் தன்னுள் பெண் தன்மையை உணர்ந்திருக்கிறார். அதன் பின்பு திருநங்கையாக படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பார்கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.

தடை அதை உடை: வழக்கறிஞரான முதல் திருநங்கை - குவியும் பாராட்டுகள் | First Transgender Lawyer Registered In Kerala

இதுகுறித்து அவர் கூறுகையில், “கல்லூரி இறுதியாண்டில் எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து முதலில் என் பெற்றோரிடமே சொன்னேன். அவர்கள் என்னை ஒதுக்காமல், அனுசரணையாக இருந்தனர். ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்ள அதிகபணம் தேவைப்பட்டது. இதற்காக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டே படித்தேன்.

முதல் திருநங்கை

மாலையில் வீட்டில் டியூசன் எடுத்தேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு வக்கீல் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. என் ஆசிரியை சமத்துவம் குறித்த புத்தகம் ஒன்றைக் கொடுத்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச்செல் என சொன்னார். வழக்கறிஞர் தொழிலில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பேன்.

என்னை அப்படியே ஏற்றுக்கொண்டு, எனக்கு பக்க பலமாக இருந்த அப்பா மோகனகுமார், அம்மா ஜெயா ஆகியோருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். முதல்முறை திருநங்கை வழக்கறிஞர் தகுதி பெற்று இருப்பதால் மாநில அரசும், பலரும் பாராட்டியுள்ளனர்.

வாழ்த்துகள் வழக்கறிஞர் பத்மலெட்சுமி!