கேரளாவின் முதல் திருநங்கை மர்ம மரணம்..!

கேரள மாநிலத்தில் முதல் திருநங்கை அனன்யா குமாரி மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் முதல் திருநங்கை ஆர்ஜேவான அனன்யா குமாரி அலெக்ஸ் கொச்சியில் தனது குடியிருப்பில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை, இறந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். . கொச்சியை தளமாகக் கொண்ட ஒரு தனியார் மருத்துவமனையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அனன்யா அதன் பிறகு கடந்த ஒரு வருடமாக, பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மீது சமீபத்தில் அனன்யா குற்றம்சாட்டியிருந்தார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு என் பிறப்புறுப்பு பகுதியில் எனக்கு கடுமையான வலி உள்ளது. இது விவரிக்க முடியாதது. சில நேரங்களில் என்னால் உட்கார முடியாது" என்று வேதனையுடன் அவர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இது ஒரு தற்கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது, பிரேத பரிசோதனை செய்த பின்னரே கூடுதல் விவரங்களை கூற முடியும் என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்