முதல் பெண் சிஐஎஸ்எஃப் தலைவர் - இந்திய வரலாற்றில் இதுதான் முதல்முறை!

India Rajasthan
By Sumathi Dec 30, 2023 07:35 AM GMT
Report

நினா சிங் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, முதல் பெண்ணாக முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.]

நினா சிங் 

மத்திய தொழிற்பாதுகாப்பு படை, விமான நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் புதிய டி.ஜி யாக நினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

nina-singh

இதன்முலம், டி.ஜி ஆக முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் 2021ம் ஆண்டில் இருந்து மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் இருந்து வருகிறார். 2013-18ம் ஆண்டு வரை சி.பி.ஐ. இணை இயக்குநராகப் பணியாற்றினார்.

தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் !! சாதனையில் அசத்தும் பிரக்ஞானந்தா - வைஷாலி!!

தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் !! சாதனையில் அசத்தும் பிரக்ஞானந்தா - வைஷாலி!!

சிஐஎஸ்எஃப் தலைவர்

மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு, மற்றும் நடிகை ஜியா கான் தற்கொலை வழங்கு விசாரணைகளை மேற்கொண்டார். இவரது கணவர் ரோஹித் குமார் ஐ.ஏ.எஸ் அதிகாரி.

cisf-chief

அவர் தற்போது மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருக்கிறார். பெண்கள் கமிஷன் செயலாளராக இருந்தபோது பல்வேறு முக்கியத் திட்டங்களை நிறைவேற்றினார். தனது இந்தப் புதிய பதவியில் அடுத்த ஆண்டு ஜூலை வரை நீடிப்பார்.