முதல்முறை பன்றி சிறுநீரகம் உறுப்பு மாற்று சிகிச்சை - பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு !
முதல் முறை மரபணு மாற்றப்பட்ட பன்றிச் சிறுநீரகத்தைப் பெற்றுக்கொண்ட நோயாளி உயிரிழந்தார் .
பன்றி சிறுநீரகம்
ஒருவருக்கு சிறுநீரகமோ, கல்லீரலோ அல்லது உடலின் முக்கிய உறுப்புகளோ செயலிழந்துவிட்டால், மூளைச்சாவு அடைந்த ஒருவர் தானம் தந்தால்தான் அவரை பிழைக்க வைக்க முடியும்.குறிப்பாக சிறுநீரக செயலிழப்பால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
அதற்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிக்கல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை படைத்தனர்.
நபர் உயிரிழப்பு
உலகில் முதல்முறையாக, மரபணு மாற்றம் செய்த பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட அமெரிக்கர் ரிக் ஸ்லேமன், அறுவை சிகிச்சை நடந்த 2 மாதம் கடந்த நிலையில் உயிரிழந்தார். மசாசூசெட்ஸ் வெய்மவுத் நகரில் வசித்து வந்தவர் ரிச்சர்ட் ஸ்லேமன்(62) .
இவருக்கு கடந்த மார்ச் மாதம் அங்குள்ள பொதுமருத்துவமனையில் பன்றியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நான்கு மணி நேரத்தில் முடிந்து பின் ஏப்ரல் மாதம் டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் அவர் தற்போது உயிரிழந்தார்.