மருத்துவ உலகில் புதிய சாதனை - மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் - எப்படி சாத்தியம்?

United States of America World
By Jiyath Sep 16, 2023 04:11 AM GMT
Report

மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உடல் உறுப்பு செயலிழப்பு 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இப்போதுவரை சிக்கலான ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. ஒருவருக்கு சிறுநீரகமோ, கல்லீரலோ அல்லது உடலின் முக்கிய உறுப்புகளோ செயலிழந்துவிட்டால், மூளைச்சாவு அடைந்த ஒருவர் தானம் தந்தால்தான் அவரை பிழைக்க வைக்க முடியும்.

மருத்துவ உலகில் புதிய சாதனை - மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் - எப்படி சாத்தியம்? | Doctors Transplanting A Pig Kidney Into Human

உதாரணமாக சிறுநீரக செயலிழப்பால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சில நூறு பேருக்கே தானமாக சிறுநீரகம் கிடைக்கிறது. மற்றவர்கள் டயாலிசிஸ் செய்தபடி தாக்குப் பிடித்து வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் உடல் உறுப்பு செயலிழப்பும், அதற்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிக்கல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

பன்றியின் சிறுநீரகம் 

அமெரிக்காவைச் சேர்ந்த 58 வயது மில்லர் என்பவர் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனால் அவரை இந்த மகத்தான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

மருத்துவ உலகில் புதிய சாதனை - மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் - எப்படி சாத்தியம்? | Doctors Transplanting A Pig Kidney Into Human

நியூயார்க் நகரில் உள்ள NYU Langone மருத்துவ மையத்தில் மருத்துவர்கள் ஜெஃப்ரி ஸ்டெர்ன், ராபர்ட் மாண்ட்கோமரி ஆகிய இருவரும் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மூலம் அவருக்கு பொருத்தினர். இதனைத் தொடர்ந்து 61 நாட்கள் மில்லரின் உடலில் சிறுநீரகம் வெற்றிகரமாக செயல்பட்டது.

மனிதர்களின் சிறுநீரகம் செய்யும் எல்லா சுத்திகரிப்பு பணிகளையும் அது இயல்பாக செய்துள்ளது. சிறுநீரையும் வெளியேற்றியுள்ளது. 2 மாதங்கள் அவர் உடலில் நிகழ்ந்த எல்லாவற்றையும் மருத்துவர்கள் கண்காணித்தனர். தொடர்ந்து 61 நாட்கள் கழித்து திட்டமிட்டபடி பன்றியின் சிறுநீரகம் அவரின் உடலிலிருந்து அகற்றப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.