இந்திய ஆறுகளில் வாழும் டால்பின்கள் -ஆய்வில் வெளியான தகவல்!
இந்திய ஆறுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டால்பின்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய ஆறு
பிரதமர் மோடி தலைமையில் நேற்று குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலய தலைமை அலுவலகத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-வது கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய ஆறுகளில் வாழும் டால்பின்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், இந்தியாவின் நதிகளில் 6,327 டால்பின்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உத்தரப்பிரதேசம், பீகார், ஜாக்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள ஆறுகளில் 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை ஆய்வு நடத்தப்பட்டது.
டால்பின்கள்
இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய ஆறுகளில் உள்ள டால்பின்களை கணக்கெடுக்கும் திட்டத்தினை பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.