ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை தான் .. எத்தனை ஆண்டுகள் தெரியுமா?
ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.
பட்டாசுகள்
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் படிப்பை முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு ஊர்களுக்கும், பல மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கும் பயணம் செய்கின்றனர்.
தங்களது வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் வேறு ஊரில், மொழி தெரியாத இடங்களில் பணி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் தங்களது குடும்பத்தைப் பார்க்கவும் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாடவும் செல்வார்கள்.
இதற்காகச் சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.
சிறை தான் ..
இது குறித்து தீபாவளி ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.இதை மீறுபவர்கள் ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று ரயில்வே காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.