தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - புதுச்சேரி அரசு அறிவிப்பு

Diwali Puducherry Puducherry Police
By Thahir Oct 14, 2022 09:29 AM GMT
Report

புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு 

நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Firecrackers are allowed for 2 hours only Diwali

அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இதே நேரம் ஏற்கனவே தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசும் அறிவித்துள்ளது.

மேலும், அதிகள் ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.