தீபாவளி பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

Diwali special buses
By Anupriyamkumaresan Nov 01, 2021 05:14 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதற்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9806 பேருந்துகள் இயக்கப்படுகிறது, இன்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2491 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்தமாக 9 நடைமேடைகளில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் 3 நடைமேடைகளில் தென் மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.

தீபாவளி பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் | Diwali Celebration Today Onwards Special Bus

பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 12 சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை 044 24749002 எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தனியார் பேருந்துகளை கண்காணிக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் குழு அமைத்துள்ளனர்.

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக 1800 425 6151 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். கூடுதல் கட்டண புகார் தொடர்பாக இதுவரை 2 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.