பட்டாசு ஆலை வெடிவிபத்து; 4 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

M K Stalin Death Virudhunagar
By Swetha Jun 29, 2024 08:13 AM GMT
Report

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவரணம் வழங்கியுள்ளார்.

வெடிவிபத்து

விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பண்டிகைகளையொட்டி பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து; 4 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு! | Firecracker Factory Blast Stalin Announced Relief

இதில் வேலை செய்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், வெடி விபத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு!

ஸ்டாலின் அறிவிப்பு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024)காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(45),

பட்டாசு ஆலை வெடிவிபத்து; 4 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு! | Firecracker Factory Blast Stalin Announced Relief

நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 35) மற்றும் மோகன் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.