பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு!
வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.
வெடிவிபத்து
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பண்டிகைகளையொட்டி பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
4 பேர் பலி
மேலும், வெடி விபத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர்.
தற்போது, இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.