திருமண மண்டபத்தில் பற்றிய தீ; மணமக்களுடன் 100 பேர் பலி - உலுக்கிய சம்பவம்!
Death
Iraq
By Sumathi
திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
ஈராக், வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், புதுமணத் தம்பதிகளுடன் சிக்கி நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
100 பேர் பலி

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலி எண்ணிக்கை உயரும் எனவும், திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil